தேசிய அறிவியல் தினத்தையொட்டி, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தேசிய அறிவியல் தினம், நமது விஞ்ஞானிகளின் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் வணக்கம் தெரிவிக்கும் வாய்ப்பாக திகழ்கிறது. அவர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வமும், ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்வதும், இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே உதவியுள்ளன. இந்திய அறிவியல் தொடர்ந்து எழுச்சி பெறுவதுடன், அறிவியல் மீது இளைஞர்களுக்கு மேலும் சிறந்த ஆர்வத்தை உருவாக்கட்டும்.
எங்களது பங்காக, மத்திய அரசு இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மேலும் சிறந்த சூழலை உருவாக்குவதற்கு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அறிவியல் மாநாட்டில் அறிவியல் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து நான் உரையாற்றினேன். அதனை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.