இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், இந்தியர்கள் 57 பேர். வெளிநாட்டினர் 17 பேர் ஆவார்கள். இதில், கேரளாவில் 17 பேரும், மராட்டியத்தில் 11 பேர், உ.பி.,யில் 10 பேர், டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு:
கொரோனா குறித்த பயத்திற்கு நோ சொல்லுங்கள் முன்னெச்சரிக்கைக்கு யெஸ் (ஆம்) சொல்லுங்கள். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பெருமளவில் ஒன்று கூடுவதை தவிர்த்தாலே கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
மத்திய அரசின் எந்த மந்திரியும் வரும் காலங்களில் வெளிநாடு செல்லமாட்டார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு நம் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். பெருமளவில் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலம் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
கொரோனா வைரஸ் நிலைமை குறித்து மத்திய அரசு முழு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மந்திரிகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பலவித நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு, விசாக்களை நிறுத்தி வைப்பது முதல் சுகாதார திறன்களை அதிகரிப்பது வரை மத்திய அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.