ஐபிஎல் டி 20 கிரிக்கெட்- மகேந்திர சிங் தோனி பயிற்சியை தொடங்கினார்:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் (சி.எஸ்.கே.) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை வந்தடைந்த சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சேப்பாக்கத்தில்  பயிற்சியை தொடங்கினார். மெதுவான ஓட்ட பயிற்சியில் ஈடுட்ட தோனி, அதன் பின்னர் பேட்டிங் பயிற்சிகள் மேற்கொண்டார். அப்போது, தனது வழக்கமான பாணியில் சில பந்துகளை கேலரிகளை நோக்கி விளாசினார்.


அவருடன் சக அணியின் வீரர்கள் அம்பதி ராயுடு, முரளி விஜய், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, ஷாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டனர். சி.எஸ்.கே. அணியின் முழு அளவிலான பயிற்சி முகாம் வரும் 19-ம் தேதி முதல் நடைபெறும் என அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.