சர்ச்சைக்குரிய 3 வினாக்களை NPR-ல் நீக்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை


NPR பணிகளை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளதை தாம் வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் , 'தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், NPR கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

NPR தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். NPR தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.