மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்ப செலவுக்காக பழங்காநத்தத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் பணம் வாங்கியதாகவும் அதற்கு அதிக வட்டி பணம் கேட்டு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் வட்டி பணம் தராததால் பிரபு சக்திவேலின் வீட்டை பூட்டிவிட்டு லொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சக்திவேல் ஜெய்ஹிந்துபுரம் சட்டம்&ஒழுங்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று கந்துவட்டி வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை செய்ததில் சக்திவேலுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தாகவும் வட்டிப்பணம் தராததால் வீட்டை பூட்டியதாகவும் பிரபு ஒப்புக்கொண்டதால் அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர் கைது