கொரோனா வைரஸ் நோய் தோற்று மேலும் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் 22.03.2020-ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில் ஆதரவற்றோர்கள் சிலர் உணவு அருந்துவதற்கு வழியில்லாமல் இருந்ததால் மதுரை தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் மகேஷ் என்பவர் அவரது வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு வந்து ஆதரவற்றோர்களுக்கு வழங்கினார். அவரது இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
தலைமை காவலரின் மனிதநேயம்!