மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்)-யின் 81-வது ஆண்டு தினம் 19.03.2020 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் படைப்பிரிவு மையம், தமிழ்நாடு அரசு காவல் துறையுடன் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் மினி மாரத்தான் (5 கிலோ மீட்டர்) போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டியில் 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் பால்சிங் நாக் முதல் பரிசு பெற்றார். லக்மு ராம் இரண்டாவது பரிசையும், மட்காம் ஷிவ்நாத் மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சிஆர்பிஎஃப் மேற்கொள்ளும் பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த மினி மாரத்தான் போட்டியின் நோக்கமாகும். மேலும் சென்னையில் உள்ள மக்களுடன் உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இது நடத்தப்பட்டது.
ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனல் வி.மிஸ்ரா தலைமையில் இந்த மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என சிஆர்பிஎஃப் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.