குறைந்த செலவில் கொரானா பரிசோதனை:டில்லி ஐஐடி ஆய்வுக்குழு!


இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஐஐடி ஆய்வுக்குழு கரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் செலவு குறைந்த பரிசோதனை வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளது, இதனால் பெரும்பாலானோர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


 இப்பரிசோதனை முறையை புனேயில் உள்ள வைராலஜி தேசிய கழகம் கிளினிக்கல் மாதிரிகளைக் கொண்டு பரிசோதித்து இதற்கு அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா தொற்று வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் வைரஸ் பரிசோதனை முறைகள் கைகொடுக்கும் என்று ஐஐடி டெல்லி கூறுகிறது.


பெரிய உபகரணங்கள் இல்லாமலேயே கரோனா உண்டா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் வகையில் நீண்ட சோதனைகள் இல்லாதவகையில் மேற்கொள்ளப்படும்.


இந்தச் சோதனை முறையை புனேயில் உள்ள தேசிய வைராலஜி கழகம் அங்கீகரித்தால் அது பலருக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.