டிவி தொகுப்பாளர் லோகேஸ்க்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி!


பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் பாபு. இவருக்கு சமீபத்தில் பக்கவாதம் வந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


இவருடைய மருத்துவ செலவுக்காக ரூபாய் 7 லட்சம் தேவை என்று இவரது நண்பர்  சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆப்ரேஷனுக்கு பிறகு தற்போது நடிகர் லோகேஷை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்து உதவியுள்ளார்.இவர் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடி தான் எனும் படத்தில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.