நபார்டு வங்கி நடத்திய விற்பனை சந்திப்பு:


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விற்பனை வாய்ப்புக்களை அதிகரிக்க உதவும் நோக்கத்துடன் உற்பத்தியாளர்-விற்பனையாளர் சந்திப்புக்கு நபார்டு ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்பில் சுமார் 40 உற்பத்தியாளர்களும், 20 விற்பனையாளர்களும் பங்கேற்றனர். நபார்டு சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியை நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் துவக்கி வைத்தார்.


நாட்டின் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நபார்டு, தமிழ்நாட்டில் சுமார் 270 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக உதவி அளித்துள்ளது. இவற்றில், சுமார் 40 நிறுவனங்கள் இன்றைய சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த சுமார் 20 விற்பனையாளர்கள் இந்த உற்பத்தி நிறுவனங்களுடன் உரையாடி, அவர்களின் விவசாயப் பொருட்களையும், மதிப்பு கூட்டிய பொருட்களையும் விற்பனை செய்வதில்  ஆர்வம் காட்டினர்.  24 மந்திரா, வேகூல், கீரைக் கடை, ராயல் ஃபுட்ஸ், லாரன்ஸ் டேல் அக்ரோ,  சன்னி பீ எக்ஸ்போர்ட்ஸ், பயக்ரி ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில்


பங்கேற்ற விற்பனையாளர்களில் சிலர்.  


இந்த உற்பத்தியாளர் – விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியினையொட்டி,


நபார்டு அலுவலகத்தில் ஒரு கண்காட்சி மற்றும் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தேங்காய் மற்றும் பிற எண்ணெய்கள், மசாலா, தினை


மற்றும் கரிம பொருட்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட


பிற தானியங்கள் மற்றும் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன.


நாபர்டு வங்கியின் ஆர் பி ஓ  சந்திர மவுலி வெளியிட்ட செய்திக்குறிப்பு