இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தனது தடையை எதிர்த்து சுமித் சங்வான், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் அப்பீல் செய்து இருந்தார். அதில் தனக்கு ஏற்பட்ட குடல் நோய்க்கு சிகிச்சை பெற்ற போது இந்த தவறு நடந்து இருக்கிறது என்று விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சுமித் சங்வானுக்கு விதித்து இருந்த ஒரு ஆண்டு தடையை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டது.