கோவை கோணார் வீதியில் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் அலுவலகத்தை திறக்க வந்தபோது உடைந்த பாட்டில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் கிடைக்க சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துனை ஆனையர் பாலாஜி இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டுவீச்சு காரணமாக அலுவலகத்துக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.