சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் பிரபல ரவுடி கல்லால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பொங்கல் என்ற முத்துக்குமார்
இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், முத்துக்குமார் கல்லால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் தலைமறைவாகியுள்ள 5 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "திருத்தங்கல் வண்ணார் குளம் பகுதியில் முத்துக்குமாரின் நண்பர்கள் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற முத்துக்குமார் மது கேட்டு தகராறு செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் சலவை செய்யும் கல்லால் முத்துக்குமாரைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த கத்தியைக் கொண்டே அவரைக் கொலை செய்துள்ளனர்.
மது போதையால் கொலை செய்த ஐந்து பேரும் தப்பியோடிய நிலையில் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.