கொரோனா - வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்



“ கொரோனா குறித்த வீண் வதந்திகளை நம்பி யாரும் பீதியடைய வேண்டாம். கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம், அரசு சார்பில் வெளியிடப்படும். பள்ளிகள், அங்கன்வாடிகள், தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  ஓமனில் இருந்து திரும்பியவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 1,22,318 பேரை பரிசோதித்துள்ளோம்” என்றார்.