பெண்களின் கண்ணியம்-பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது: பிரதமர்


நாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதில் சமத்துவத்துக்கும், வாய்ப்புகள் அளிப்பதற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


அவர் தமது டுவிட்டரில், “நமது நாட்டில் மகளிர் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்தோங்கி உள்ளது” எனக் கூறியுள்ளார்.


நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.