பெண் மாவோயிஸ்டு கைது..!


தமிழக - கேரள எல்லைப்பகுதியான ஆனைகட்டி அருகே க்யூ பிரிவு போலீசார் பெண் மாவோயிஸ்ட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக, கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனையில் இறங்கிய போலீசார் பேருந்தில் சென்று கொண்டிருந்த பெண் மாவோயிஸ்டு ஒருவரை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கேரளாவிலிருந்து கோவை நோக்கி செல்லும் பேருந்தை ஆனைகட்டி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்டு ஸ்ரீமதியை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.