'மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகத்தை மாற்றிய தமிழக அரசு!


1937ம் ஆண்டு முதல், மது பாட்டில்களில் 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகம் தான் அச்சிடப்பட்டு வருகிறது. அப்படி அச்சிடப்பட்டு மட்டும் என்ன உபயோகம் என்று பலரின் மனத்திலும் கேள்வி எழத்தான் செய்கிறது. இந்நிலையில் அந்த வாசகத்தை மாற்றி, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' என்று போடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.