ஈரோடு அருகே சூலை நெசவாளர் காலனி லட்சுமிநகர் பகுதியில் ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த ஓடைப்பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையை மட்டும் யாரோ அரிவாளால் வெட்டி எடுத்துவந்து பாலத்தின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தலை மட்டும் தனியாக பாலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடலை தேடியபோது அங்கிருந்து 300 அடி தூரத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் வாலிபரின் தலையை வெட்டி கொடூர கொலை!