நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.
அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள இப்படம் ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் காட்சிகள் பெரிதும் பேசப்படும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் கூறினார்.தற்போது சென்னையில் பைக் சேசிங் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித் டூப் போடாமல் நடித்து வருவதாகவும் செய்திகள் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் இருந்து படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.
வலிமை படத்திலிருந்து எந்த ஒரு காட்சியும் வெளியாகாமல் இருக்க ஜாக்கிரதையாக படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ள இந்நிலையில் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இனி வலிமை படப்பிடிப்பில் செல்போன் உபயோகிப்பதற்கு தடை போட்டுள்ளாராம் வினோத் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.