தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிகள் மூலம் ஹஜ் இல்லங்கள் கட்டப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் இல்லங்கள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. அதனால் மத்திய அரசு இத்திட்டத்திற்கு நிதி எதையும் ஒதுக்கவில்லை. அதேசமயம், மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் இல்லங்களை அமைக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.