கும்மிடிப்பூண்டி மதுபான கடை அருகே வடமாநில வாலிபர் அடித்து கொலை


கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இக்கடையின் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் ஒரு வாலிபர் முகம் சிதைந்த நிலையில், தோள்பட்டை உடைந்த நிலையில் இருப்பதை கண்டனர். அவரது சட்டை பையை போலீசார் சோதனை செய்ததில், அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ரூட் (30) எனத் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அந்த வடமாநில வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.