கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஞாயிறன்று நடைபெறவுள்ள மக்கள் ஊரடங்குக்கு ஒன்று சேர்ந்து ஆதரவளிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மக்கள் ஊரடங்குக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடே ஒன்று சேர்ந்து இதனைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.