எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ஆம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.