20/20 உலக கோப்பை - ஐ.சி.சி., உறுதி!


'டுவென்டி-20' உலக கோப்பை தொடரை நடத்துவதில் ஐ.சி.சி., உறுதியாக உள்ளது.கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டது.   வரும் அக். 18-நவ. 15 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலிய வீரர் வார்னர், இந்தியாவின் ரோகித் சர்மாவிடம் 'இன்ஸ்டாகிராம்' வழியாக பேசுகையில்,''இப்போதுள்ள சூழலைப் பார்த்தால் உலக கோப்பை தொடர் நடக்கும் எனத் தெரியவில்லை. 16 அணிகளை ஒருங்கிணைத்து தொடரை நடத்துவது கடினம்,'' என்றார். தவிர ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச்,'இத்தொடர் தாமதமாகலாம்,' என்றார்.


இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு மற்றும் ஐ.சி.சி., இடையே உலக கோப்பை தொடர் குறித்து எவ்வித கூட்டமும் கடந்த வாரம் நடக்கவில்லை. தொடர் திட்டமிட்டபடி நடக்கும்,'' என்றார்.