ரமலான் பண்டிகை:ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 3 நாள் போர்நிறுத்தம்!


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக உள்நாட்டு படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

 

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு சமாதானம், நல்லிணக்க செயல்முறையை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியது.  தலீபான் பயங்கரவாதிகளுடனான போரை கட்டுக்குள் கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியும் வருகிறது.

 

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 3 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவித்து உள்ளனர்.  இதுபற்றி அந்த பயங்கரவாத குழு வெளியிட்டு உள்ள செய்தியில், ரமலானை நாட்டு மக்கள் திருப்தியுடன் கொண்டாடுவதற்காக, ரமலானின் 3 நாட்களுக்கு, நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து முஜாகிதீன்களுக்கும் தலைமை, அறிவுறுத்தல் அல்லது உத்தரவு வழங்கியுள்ளது.

 

இந்த 3 நாட்களுக்கும் எதிரிகள் எந்த பகுதியில் இருப்பினும் தாக்குதல் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்து உள்ளது.