குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்தும், கடனுக்கான தவணை செலுத்தும் காலக்கெடுவை மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டித்தும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார்
கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்தால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவி்த்தது.
அதேபோல இந்த முறையும் கடனுக்கான தவணையை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார். இதன் மூலம் கடனுக்கான தவணை செலுத்தும் அவகாசம் 6 மாதங்களாக கடந்த மார்ச் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.