திமுக ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது அடுத்து தயாநிதிமாறன்?எச்.ராஜா


திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 




சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் என்று கூறியுள்ளார்.