அரியலூர் மாவட்டம் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் சகோதரியுடைய மகனும் மருமகனான மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு பலத்த காயத்துடன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதி.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு. அவரது மகன் கனலரசன் (24). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரான சின்னப்பிள்ளை குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கனலரசன், அவரது சகோதரி கணவர் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோரை, சின்னப்பிள்ளை, அவரது மகன் அய்யப்பன், சின்னப்பிள்ளை தம்பி காமராஜ், அவரது மகன் சதீஷ் ஆகியோர் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் குரு மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் காயமடைந்தனர். கனலரசன் தரப்பு வெட்டியதில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த காமராஜ் மகன் சதீஷு ஆகியோர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.