இஸ்லாமிய சகோதர சொந்தங்களுக்கு புதிய நீதிக்கட்சியின் நிறுவனர்,தலைவர்
டாக்டர் ஏ.சி.சண்முகம் ரமலான் பண்டிகை வாழ்த்து செய்தி
இஸ்லாமிய பெருமக்களின் புனிதமான திருநாள் ரமலான் திருநாளாகும். ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து முஸ்லீம்களின் முக்கிய கடமையாகும். மனித ஒழுக்கம், நல்ல பணிகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இவையே நோன்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த நோன்பில் பங்கு கொள்வதால் ஐம்புலன்களும் கட்டுப்படுகின்றது. இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுதல் தருமம் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இந்த நோன்பு மனிதனை பக்குவப்படுத்துகின்றது.
நோன்பு காலத்தில் வறுமையில் உள்ள ஏழை எளியோருக்கு உதவி செய்வதை குர்ஆன் வலியுறுத்துகின்றது. இந்த நோன்பு ஏழை, பணக்காரன் என்கின்ற பேதம் கிடையாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை இந்த புனித மாதம் தெள்ளத் தெளிவாக்குகின்றது.
இந்திய திருநாடு பல்வேறு மதங்களை தனக்குள்ளடக்கிய நாடு. மதசார்பற்ற நம்நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் வேற்றுமையின்றி உடன்பிறவா சகோதரார்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தங்கள் பண்டிகை காலங்களில், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறியும், இனிப்புகளை பரிமாறியும் தங்கள் அன்பை வெளிகாட்டுகின்றார்கள். இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.