‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தொடர்ந்து 7 புதிய படங்கள் இணையத்தில் வெளியீடு?


ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.“சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தயாரித்துள்ளனர். அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.




‘பொன்மகள் வந்தாள்’ படத்துடன் அனுஷ்கா சர்மா நடித்த ‘நிசப்தம்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’, வித்யாபாலன் நடித்த ‘சகுந்தலாதேவி’ உள்பட 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர தயாராக இருப்பதாக பேசப்படுகிறது.”