போலீஸ்காரர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!


மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள மேலமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஷாஜகான்(25). இவர் சென்னையிலுள்ள 42-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.



கரோனா விடுமுறைக்காக மதுரைக்கு வந்ததார். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு இவரது வீ்ட்டு வாசலில் பயங்கர சத்தம் கேட்டது. ஷாஜகான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இது பற்றி அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 




விசாரணையில், கடந்த 25-ம் தேதி வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட யாகப்பா நகர் சூரியா (21), பால முருகன்(20), மேலமடை அன்புச்செழியன்(34), அலங்காநல்லூர் இருதயராஜ்(25), புதூர் சதாம் உசேன்(28)  இவர்களை போலீஸில் சிக்க வைக்க, காவலர் ஷாஜகான் தான் காரணம் என கருதியவர்கள் ஆத்திரத்தில் அவர்களின் நெருங்கிய கூட்டாளிகள் மூலம் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.