தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத்தொடங்கியுள்ளன. ஆட்டோக்கள் இயக்கவும் சலூன்களை இயக்கவும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை.கொரோனா தடுப்பதில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது என முதல்வர் தெரிவித்துள்ளார்.