கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது மதுரை மாநகர் மாவட்ட காங்கி நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டார்கள். அதில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் கலந்து கொண்டனர்.
அதில் கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்தார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார் எம்.பி. ஜோதிமணி.
இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸிடம் பாஜக நிர்வாகி கரு. நாகராஜனுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.