மதுரை மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தெந்த மாநிலத்திற்கு செல்ல அனுமதி கேட்டிருந்தார்களோ அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி அவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. பேருந்தில் செல்ல முடிந்தவர்கள் சென்றுள்ளார்கள்.
உத்தரப்பிரதேசத்திற்கு 66 நபர்களும், மேற்குவங்கத்திற்கு 90 நபர்களும்,
மேகாலயா மிசோரத்திற்கு 30 நபர்களும் இங்கிருந்து சென்னை சென்று
சென்னையிலிருந்து இரயில் மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
அதேபோல் மதுரையிலிருந்து 18.05.2020 அன்று மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகியமாவட்டங்களில் பணிபுரிந்த 1600 நபர்கள் உத்தரப்பிரதேசத்திற்கு இரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மதுரையில் பணிபுரிந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு இணையத்தளத்தில் தங்கள் மாநிலத்திற்கு செல்வதற்காக பதிவு
செய்தவர்களின் விபரங்களை ஆய்வு செய்து யார் யாருக்கு விருப்பம் உள்ளது
என தெரிந்து அவர்களை அந்தந்த இடத்திலிருந்து வருவதற்கு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்கள் செல்வதற்கு அனுமதி அட்டை, உணவு, குடிநீர் ஆகியவை ஏற்பாடு செய்து மதுரை இரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்க படுகின்றனர்.
(21.05.2020) மாலை பீகார் செல்லும் இரயிலில் மதுரை மாவட்டத்தில்
பணிபுரிந்த 1,144 நபர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்த 456 நபர்களும் என மொத்தம் 1,600 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர், அவர்கள்பீகாரில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக அனுமதி
கேட்டு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.தொடர்ச்சியாக அனுமதி
கேட்டுள்ளவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளனர் என ஆட்சியர் வினய் தெரிவித்தார்.