உதவி இயக்குனர் லாரி மோதி பலி..!


கோவை மாவட்டம்,அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் திரைத்துறையில் இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல முக்கிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், இவர் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதினார்.



இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.