ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே போதைப் பொருள் கடத்தல் கும்பலை போலீஸார் 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
டிஎஸ்பி புகழேந்தி தலைமையில், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில் ஒரு கும்பல் வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து, தொண்டியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீம்(49), அஜ்மல்கான்(48), சூராணத்தைச் சேர்ந்த அபுல்கலாம் ஆசாத்(23), தேவகோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(44), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அருள்தாஸ்(43), வீரசங்கிலிமடத்தைச் சேர்ந்த முத்துராஜா(38), கருமொழியைச் சேர்ந்த கேசவன்(42), சோளியக்குடியைச் சேர்ந்த அப்துல்வஹாப்(36), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த அஜ்மல்கான்(42) ஆகியோரை கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள மெத்தாகொலைன், ஆம்பெட்டாமைன், ஹெராயின், ஓபியம் உள்ளிட்ட போதை பொருட்கள், ரூ.2.50 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.