நாட்டு மக்களுக்கு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


‘‘ஈத் முபாராக்!


ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த திருநாளில் கருணை, சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் வாழவேண்டும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.