சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவத்தை தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவு!


லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள  எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இது போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது.


சீன அதிபர்  ஜி ஜின்பிங் தனது இராணுவத்தை  தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். மேலும்  நாட்டின் இறையாண்மையை உறுதியாக பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துக்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பதற்றத்தை குறிப்பதாக உள்ளது. 


தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா - சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


எனவே இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது