கொரானா தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்க குற்றச்சாட்டு!


கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி தகவல்களை  சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் நம்புகின்றனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கொரோனா தடுப்பூசியை உருவாக்க அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் போட்டியிடுவதால், சீன ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளன.

 

கொரோனாவுக்கான சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை ஹேக்கர்கள் குறிவைக்கின்றனர்.

 

ஆனால் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தார், அனைத்து இணைய தாக்குதல்களையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று கூறினார்.

 

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழிநடத்துகிறோம். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சீனாவை வதந்திகள் மற்றும் அவதூறுகளால் குறிவைப்பது ஒழுக்கக்கேடானது" என்று ஜாவோ லிஜியன் கூறினார்.

 

ஈரான், வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அரசாங்க ஆதரவுடைய ஹேக்கர்கள் தொற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளை குறிவைப்பது தொடர்பான எச்சரிக்கை ஆகும்.

 

கடந்த வாரம்  இங்கிலாந்தும், அமெரிக்காவும் வெளியிட்ட கூட்டு செய்தியில்  கொரோனா வைரஸ் ஆய்வில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களுக்கு எதிரான இணைய தாக்குதல்கள் அதிகரிப்பதாக எச்சரித்தன.

 

இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மற்றும் அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை பெரிய அளவிலான பல தந்திரங்களை கண்டறிந்துள்ளன - பொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் மூலம் கணக்குகளை அணுக முயற்சிக்கும் ஹேக்கர்கள் - சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

 

பென்டகனின் சைபர் கட்டளை மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்ட இணையப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஏஜென்சிகள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எதிர் தாக்குதல்களுக்கு இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் கூறி உள்ளது.