கடலூர்,
கடலூர் தெற்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம்ஒன்றியம் ,பேரூர்கழகம் சார்பில் கொரோனோ ஊரடங்கின் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 60 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
தமிழக அரசு தற்போது ஆட்டோ ஓட்ட அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆட்டோக்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.இவர்களுக்கு உதவிடும் நோக்கில் தே.மு.தி.க.சார்பில் ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் இருக்கும் வாழ்வாதரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அவர்கள் மறுபடியும் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்திடவும் அனைத்து ஆட்டோக்களுக்கும் பெட்ரோல் நிரப்பும் நிகழ்ச்சி ஒன்றியசெயலாளர் ராஜவன்னியன்
தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சில் பேரூர் கழக அவைதலைவர் செல்வராசு,பொருளாளர் சுந்தரம்,துணை செயலாளர் சிவராமன்,ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணராஜ்,மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மணிகன்டன், மாவட்ட பிரிதிநி மரியம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் கழக கேப்டன் மன்ற செயலாளர் வெற்றிவேல் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சதீஷ் கழக மணவர் அணி செயலாளர் காளிதாஸ் மற்றும் கேப்டன் ராஜ், வார்டு செயலாளர் கலியமூர்த்தி உடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.