உலக புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான். இவருக்கு இந்தியாவில் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஜாக்கி சான் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்களுக்கு அமைதி மற்றும் அன்பின் செய்தியை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இந்தியாவின் சீன தூதர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் சீன தூதர் சன் வீடோங் செவ்வாயன்று ஜாக்கி சானின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து அதில் அவர் இந்தியர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக வாழ்த்தி உள்ளார்.