மாஸ்க் அணியாததால் ரூ.100 அபராதம் செலுத்திய காவல்துறை ஐஜி!


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காவல்துறை ஐஜி மோஹித் அகர்வால் என்பவர், முகக்கவசம் அணியாத காரணத்திற்காக ரூ.100 அபராதம் செலுத்தியுள்ளார். தான் மாஸ்க் அணியாமல் வெளியே வந்துவிட்டதாகவும், அதற்காக அபராதம் விதிக்குமாறும் அவரே அதிகாரிகளை கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘நான் பாரா பகுதிக்கு கண்காணிப்பு பணிக்காக சென்றிருந்த போது மாஸ்க் அணியாமல் காரை விட்டு இறங்கி விட்டேன். அதன்பிறகு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். அப்போதுதான் மாஸ்க் அணியவில்லை என நினைவுக்கு வந்தது. எனவே உடனடியாக எடுத்து அணிந்தேன். இருப்பினும் மக்கள் அனைவரும் அபராதத் தொகை செலுத்தும் போது, நான் மட்டும் அதனை செலுத்தாமல் இருந்தால் அது தவறு. அதனால் அதிகாரிகளிடம் கூறி அபராதம் செலுத்தினேன்’ என கூறியுள்ளார்.