முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்;கும்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!


வெளியே போகும்போது தயவு செய்து முககவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு கடுமையான சூழலை எதிர்க் கொண்டு, நோயை கட்டுப்படுத்தி வருகிறது. அதிகமான சோதனை செய்வதால், அதிகமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கமுடிகிறோம். இதனால் தான் முன்கூட்டியே குணமாக்கமுடிகிறது என்று சுகாதாரதுறை அமைச்சர் கூறினார்.


மேலும் அவர் கூறுகையில்,நோயில் வெற்றி என்ன? தோல்வி என்ன?. நோய் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகவே அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. மற்றொன்று இறப்பை தவிர்க்கவேண்டும். இதுதான் அரசின் நோக்கம். எனவே எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வெளியில் போகும்போது கட்டாயமாக முககவசம் அணியுங்கள் என்றார்.