தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் மொத்தமாக 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் இருப்பதாகவும், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ 1 3 ஐ(Glade A 1 3 i) என்ற புதிய வகை பரவி வருவதாக தெரியவந்துள்ளது. மற்ற வகை வைரஸ்களை காட்டிலும் இது தீவிரத்தன்மை கொண்டது என்றும் தமிழகம் தவிர தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கிளேட் ஏ 1 – 3 ஐ வகை வைரஸின் தாக்கம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் மராட்டியத்தில் இருந்து பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.