கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பு!


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வின்போது, பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கீழடியில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில், தற்போது, முதன் முறையாக நீளமான முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகளுடன் கூடிய விலங்கின் எலும்புக்கூடு அகழாய்வில் கிடைத்துள்ளது.


இதன் மூலம், பண்டைய தமிழர்கள், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அகழாய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே, 4ஆம் கட்ட அகழாய்வில், திமிலுடன் கூடிய காளைமாட்டின் எலும்பு கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு, எந்த விலங்கு வகையை சேர்ந்தது என்பது, அகழாய்வு குழியை முழுமையாக தோண்டிய பின்னரே தெரிய வரும்.