மதுரை மாநகரில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த
66 வயதுள்ள ரெங்கசாமி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரை பெற்று ரெங்கசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதை தொடர்ந்து பெற்றோர்கள் அனைவருக்கும் மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.
உங்களது குழந்தைகளை நீங்கள் அதிகமாக நேசித்தால் மட்டும் போதாது. அந்நிய நபர்கள் யாரையும் எளிதில் நம்பி உங்களது வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
உங்களது குழந்தையை உங்கள் கண் பார்வையிலேயே பாதுகாப்பாக வைத்திருங்கள்.
குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளி இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு GOOD TOUCH மற்றும் BAD TOUCH பற்றி சொல்லிக்கொடுங்கள்.
குழந்தைகளை விளையாட வெளியே அனுப்பும்போது தனியாக அனுப்பாதீர்கள்.
மேலும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை துன்புறுத்தும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.