மருத்துவமனை கொலைவழக்கில் ஈடுபட்ட சிறார் உட்பட எட்டு நபர்கள் கைது




கடந்த 08.06.2020-ம் தேதி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். E2 மதிச்சியம் ச&ஒ காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி புலன் விசாரணை செய்ததில் கொலை செய்த நபர்கள் மதுரை மாநகர் கரும்பாலையை சேர்ந்த அருண்பாண்டி என்கிற புக்குருட்டி 20/20, கரண்ராஜ் 20/20, சல்மான்கான் 20/20, தவசிபாண்டி 19/20, ராமச்சந்திரன் 19/20, விக்கி என்கிற விக்னேஸ்வரன் 19/20, ஆகிய ஆறு நபர்களையும்  கல்மண்டபத்தில் வைத்து கைது செய்தும் மற்றும் ஜெகதீஸ்வரன் என்கிற இருட்டு 19/20 மற்றும் ஒரு இளம்சிறார் ஆகிய இருவரையும் டாக்டர் தங்கராஜ் சாலை அருகே வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.