கஞ்சா வழக்கில் கைதான நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!

 

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44/20, என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததார்.அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி திருப்பதி என்ற கவாத்து திருப்பதி என்பவர்  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.