இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி மாணவியிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கிய வாலிபர் கைது








மதுரை மாநகரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாக மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும் விக்னேஷ் மாணவிடமிருந்து நகைகளையும், பணத்தையும் வாங்கியதாகவும் மீண்டும் நகை மற்றும் பணத்தை திரும்ப கேட்டபொழுது பணம் நகைகளை தரமுடியாது என்றும் மாணவியுன் வீட்டிற்கு சென்று அநாகரிகமான வார்த்தைகளை பேசி மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மாணவிடமிருந்து நகைகளையும், பணத்தையும் வாங்கிய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.