கடலூர்,ஶ்ரீமுஷ்ணத்தில் தே.மு.தி.க.சார்பில் கோவில் குருக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது


 


கடலூர், தெற்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம்ஒன்றியம் ,பேரூர்கழகம்  சார்பில் கொரோனோ ஊரடங்கின் காரணமாக கோவில்களில் பூஜை நடைபெறாமலும் விழாக்கள் நடத்தப்படாமலும் உள்ள நிலையில் கோவில் கோவில் குருக்கள் மற்றும் பூசாரிகளுக்கு கொரானா நிவாரண காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.


பூவராக திருக்கோவில் வளாகத்தில்  தே.மு.தி.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமை தாங்கி கொரானா நிவாரண காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.உடன் கழக ஒன்றிய செயளாளர் ராஜ வன்னியர்,நகர அவை தலைவர் செல்வராஜ்,நகர பொருளாளர் வழக்கறிஞர் சுந்தரம்,து.செ.கலியமூர்த்தி,துரை சிவராமன்,மாவட்ட பிரதிநிதி வெற்றிவேல்,ஒ.து.செ.மரியபிரசாத், கிருஷ்ணதாஸ்,பால்ராஜ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.